Seed Certification
விதை நேர்த்தி :: விதை மேலாண்மை
பச்சைப்பயிறில் தாவரம் பொருட்களைக் கொண்டு விதை மூலாம் பூசுதல்

உயிரியக்க ரசாயனங்கள் உள்ள பிசின் மற்றும் தாவர நிரப்பு பொருட்களை கொண்டு விதையை எளிதாக கையாளும் வகையில் பூசுதல்

செய்முறை
  • விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 10 சதவீத மைதா கஞ்சியை சிறிதளவு விதைகளின் மேல் ஊற்ற வேண்டும்.
  • தட்டை மெதுவாக அசைக்கும் போது மைதா பசையான விதைகளின் மேல் ஒரே சீராக பரவுகிறது.
  • நிரப்புப் பொருளான அரப்புத் தூளை விதைகளின் மேல் ஒரே சீராக தூவ வேண்டும்.
  • விதைகளை நன்கு கலக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும் விதைகளை நீக்க வேண்டும்.
  • எஞ்சிய திரட்டிப் பொருளான அரப்புத்தூளை சல்லடை கொண்டு சளித்து அகற்ற வேண்டும்.
  • விதைகளை நிழலில் போதிய ஈரத்தன்மைக்கு வரும்வரை உலர்த்த வேண்டும்.
நன்மைகள்
  • சிறிய மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள விதைகளைக் கையாளும் முறை எளிதாகின்றது.
  • விதையின் அளவு மற்றும் எடை அதிகமாவதால் துல்லி விதைப்பு பெறமுடிகின்றது.
  • வினையியல் சார்ந்த விதைத் தரத்தை உயர்த்துகின்றது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam